52 வயதான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய நாடு முழுவதும் ஆதரவு அலை! ஐ.தே.க

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி உட்பட சில கட்சிகள் இணைந்து உருவாக்கும் கூட்டணியில் 80 வீதமான அதிகாரம் தமது கட்சிக்கே இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் கோத்தபாய ராஜபக்ச வேட்பாளராக போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பிரச்சினையில்லை.

எனினும் 52 வயதான ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய நாடு முழுவதும் ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியினால் அந்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு தற்போது 52 வயது, அவரையே நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மறைமுகமாக கூறியுள்ளார்.