கோத்தபாய ஊழல், மோசடிக்கு எதிரானவர் - பசில் ராஜபக்ச

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தற்போது தனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மீது சிலர் கடும் அச்சத்தில் உள்ளனர். அவர் கடுமையான நிர்வாகி அல்ல. ஊழல், மோசடிக்கு எதிராக கடுமையாக செயற்படும் கோத்தபாய ராஜபக்ச, முகாமைத்துவத்தில் மிகவும் திறமையானவர் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அதன் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

Latest Offers