சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் கருத்து மோதல்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் பெரிய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்குமாயின் கட்சியின் அடையாளத்தை பாதுகாத்து அதனை செய்ய வேண்டும் என அண்மையில் கூடிய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி என்ற வகையில் கூட்டணியில் இணையும் போது நிபந்தனைகளை முன்வைக்க வேண்டும் என கூறியுள்ள அவர், இருக்கும் பலத்தை காண்பிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நிமல் சிறிபால டி சில்வா, தற்போதுள்ள செயற்பாட்டு ரீதியான நிலைமை புரிந்து கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கீழ் மட்டத்தில் பலமாக முன்னேறி வந்துள்ளது எனவும் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது நிலைமையை அறிந்து செயற்படுவது நல்லது எனவும் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.