என்னை பார்த்து பொறாமை படுகின்றனர்! சஜித் குற்றச்சாட்டு

Report Print Jeslin Jeslin in அரசியல்

எனக்கு மக்கள் ஆணை கிடைத்தால் முதல் ஐந்து வருடங்களுக்குள் நாட்டின் சகல விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும். எனது தந்தையையும் மீறி சேவை செய்வதே எனது எதிர்ப்பார்ப்பு என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது தந்தை மதத்துக்கு செய்த சேவைகளையும் மிஞ்சியதான சேவைகளை நான் முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

எனினும் நான் அதனைக் கூறும்போது பலர் என்மீது பொறாமை அடைகின்றனர். என்னை மட்டம் தட்டும் செயற்பாடுகளில் பலர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

எனக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கின்றது. எனக்கு அந்த ஆணை கிடைத்தால் முதல் 5 வருடங்களில் நாட்டின் சகல விகாரைகளும் அபிவிருத்தி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers