நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே தேசிய தலைவர்களின் கடமை

Report Print Steephen Steephen in அரசியல்

சில மத தலைவர்கள் பொறுக்கிகளுக்கு மீண்டும் சிம்மாசனத்தை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் தமது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க தவறான முறையில் சம்பாதித்த பணத்தை பௌத்த தர்மத்திற்கு செலவிட்டு வருவதை காண முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் மத தலைவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று கொண்டுள்ளனர்.

நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே தேசிய தலைவர்களின் கடமை எனவும் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.