செப்டம்பர் 3இல்..! தயாரானது மைத்திரி அணி

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி மாநாட்டில் சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் தேர்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 2ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த சுதந்திர கட்சியின் மாநாடு 3ஆம் திகதி நடத்தப்படும்.

சுகததாச உள்ளக அரங்கில் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் இந்த மாநாடு நடைபெறும்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொள்வார்கள்.

மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. மாவட்ட கூட்டங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், தொகுதி கூட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் தலைமையிலும் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers