அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட தயாராகும் மகிந்த!

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் 11ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார்.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தாபய ராஜபக்ச நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது அதிபர் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers