அமெரிக்க உயர் அதிகாரி இலங்கைக்கு விஜயம்

Report Print Steephen Steephen in அரசியல்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.

அவர் கடந்த 6ஆம் திகதி முதல் 11 நாட்கள் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகிறார். இதனடிப்படையில், அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.

பதில் உதவி இராஜாங்க செயலாளர் தற்போது பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இலங்கை வரும் அமெரிக்க அதிகாரி, அரசாங்கத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகளை சந்தித்து இருத்தரப்பு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன் வர்த்தக மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.