ரணில் தலைமையில் விரைவில் புதிய கூட்டணி: வஜிர அபேவர்தன

Report Print Steephen Steephen in அரசியல்

பொருத்தம், பொருந்தாமை, வாத விவாதங்கள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்து கட்சிகள் மற்றும் அணிகளை இணைத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய கூட்டணி விரைவாக உருவாக்கப்படும் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளாரர்.

கூட்டணி அமைக்காமல் எந்த வேட்பாளருக்கும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என நான் நம்பவில்லை.

கூட்டணியாக தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பிரதான விடயம். ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் கூட்டணி அமைப்பது மிகவும் முக்கியமானது.

கூட்டணியை அமைக்கும் போது பொருந்தம், பொருந்தமற்ற, பொருளதார, அரசியல் கொள்கைகள் உள்ள அனைத்து தரப்பினரும் இணைய முடியும்.

இதற்கு அமையவே ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பு போட்டியிடுது என ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாங்கள் தெளிவான தீர்மானத்தை எடுத்தோம்.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் நாங்கள் மிக விரைவில் கூட்டணியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதற்காக பல்வேறு கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்று வருகின்றோம்.

1978ம் ஆண்டுக்கு பின்னர் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும்கூட்டணி அமைக்கும் அனைத்து தரப்பினரும் வெற்றி பெற்றனர் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.