நான் யாரையும் வெள்ளை வானில் கடத்திச் சென்றதில்லை - பிரதமர் ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் தற்போது கூட்டணி அரசியல் உருவாகி இருப்பதாகவும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அப்படியான கூட்டணியின் ஊடாகவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த வைபவம் ஒன்றில் பிரதமர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு சர்வாதிகாரி அவசியமில்லை. எமக்கு ஒழுக்கம் தேவை. ஜனநாயகம் மற்றும் ஒழுக்கம் ஆகிய இரண்டுடன் நாங்கள் முன்னோக்கி செல்வோம். தினமும் தொலைக்காட்சிகளில் என் மீது குற்றம் சுமத்தும் போது நான் மகிழ்ச்சியடைவேன்.

ஒருவரையும் நான் வெள்ளை வானில் கடத்திச் சென்றதில்லை. எதிர்காலத்திலும் குறை செல்லுங்கள். விமர்சனங்களை முன்வையுங்கள். நாங்கள் ஏற்படுத்திய மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த மாற்றத்தினால் மக்கள் மாறியுள்ளனர். இருப்பதற்கு நாடு வேண்டுமானால், அரசியலை மாற்ற வேண்டுமாம். நாம் புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்ள நாங்கள் கூட்டணியை அமைப்போம். நாட்டின் மாற்றத்தினால், அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாம் கூட்டணி அரசியலை காண்கின்றோம். பிரதான கட்சிகளின் தலைமையின் கீழ் மூன்று கூட்டணிகள் ஏற்படும். அந்த கூட்டணிகளில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நேரிடும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers