அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்!

Report Print Ashik in அரசியல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய இரு மாதிரிக் கிராமங்களில் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாடு பூராகவும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய கோசம் எழுப்பப்பட்டு வருகின்றது.

ஒரு பக்கம் கோத்தபாய ராஜபக்சவின் பெயரும், இன்னொரு பக்கம் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன் மொழியப்படுகின்ற போதும் இன்னும் பல பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பல அமைச்சர்களிடம் பேசினோம். உதவி கோரினோம். ஆனாலும் செயலாற்ற கூடிய, ஏழைகளுக்கு செயலாற்ற கூடிய தலைவர் அமைச்சர் சஜித் பிரமதாசவே.

உண்மையை கூற வேண்டுமானால் எங்களுடைய மனங்களில் வீடு தந்த நீங்கள் இருக்கின்றீர்கள். ஆகவே ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக தெரிவிக்கப்படுகின்ற போது எங்கள் மக்கள் சரியான முடிவெடுப்பார்கள்.

அத்துடன் தோட்டவெளி கிராமத்தில் வீட்டுதிட்டங்கள் வழங்கப்பட்ட போதிலும், இன்னும் வீடுகள் தேவையானவர்கள் இருப்பதனால் அவர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கையாக விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீங்கள் எங்களுக்கு வீடு தந்திருக்கின்றீர்கள் நாங்கள் வீடுகளை ஒரு போதும் மறப்பதில்லை. அதே போன்று வீடுகளை தந்த உங்களையும் மறக்கமாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers