விஜேதாச ராஜபக்சவிற்கு நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியில்லை!

Report Print Kamel Kamel in அரசியல்

நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவிற்கு நாடாளுமன்றில் இருப்பதற்கு தகுதி கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் ஊழல் மிக்கது என விஜயதாச கூறினால் அவர் இங்கு இருப்பதற்கு தகுதியற்றவர் என கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிக் கணனிகள் கையூட்டலாக வழங்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றம் ஊழல் மோசடி நிறைந்தது எனவும் விஜயதாச ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும், இந்த கருத்து விஜயதாசவின் தனிப்பட்ட கருத்து எனவும், வேறும் நாடுகளிலிருந்து நாடாளுமன்றிற்கு உதவிகள் கிடைப்பது வழமையானது எனவும், அந்த வகையிலேயே சீனா, மடிக்கணனிகளை வழங்கியுள்ளது எனவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.