எனக்கு அந்த அதிஸ்டம் கிடைக்கவில்லை : மனமுருகும் பெசில்

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளராக தெரிவாகும் அதிஸ்டம் தமக்கு கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச எதேச்சதிகார போக்கில் செயற்பட மாட்டார் எனவும், அவர் ஜனநாயக ரீதியான ஓர் தலைவர் எனவும் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எவரும் அஞ்ச வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் அமெரிக்க குடியுரிமையை கைவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனவும், எனினும் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் எதிர்வரும் 11ம் திகதி பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்படுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு பெசில் ராஜபக்ச நேரடியாக பதில் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.