யுத்தம் நடந்த போது சம்பந்தன் - மாவை எங்கு மறைந்திருந்தார்கள்?

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அல்லது தமிழரசு கட்சியை வழிநடத்துகின்றவர்கள் எவருமே இந்த மண்ணில் இருந்தவர்கள் கிடையாது என சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

அவர்கள் இந்த மண்ணில் பிறந்தவருக்கு இடம்கொடுக்க கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். யுத்தம் இடம்பெற்ற போது சம்பந்தன், மாவை உள்ளிட்டவர்கள் இந்தியாவில் இருந்தார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.