தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கௌரவ பதவியொன்று?

Report Print Kamel Kamel in அரசியல்

தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கௌரவமான பதவியொன்றை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் கூட்டணி அமைக்கப்பட்டதன் பின் மைத்திரிக்கு கௌரவமான பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் இந்த கௌரவமான பதவி எதுவென்பது பற்றியோ, அதற்கான வரப்பிரசாதங்கள் எவை என்பது பற்றியோ தகவல்கள் வெளியாகவில்லை.

கௌரவமான பதவியொன்றை வழங்குவதாக பொதுஜன முன்னணி உறுதிளித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மைத்திரி கம்போடியாவிற்கான விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அதன் பின் கட்சி அடிப்படையில் நடைபெற்ற சந்திப்புக்களின் மூலம் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.