கோத்தபாய சவாலாக இருப்பார்! ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் கூட்டணியை உருவாக்க உள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மொரட்டுவையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச சவாலாக இருப்பார். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருக்கின்றது எனவும் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் சிலர் சென்று கோத்தபாய ராஜபக்சவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க, ஊடகங்கள் கூறும் அனைத்து விடயங்களும் உண்மையானவை அல்ல என குறிப்பிட்டுள்ளார்.