நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற எனக்கு அவசரமில்லை - சாந்த பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

தனக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்று கொள்ளவே பதவியை ராஜினாமா செய்ததாகவும், வேறு ஒருவருடைய அரசியல் பயணத்திற்கு தடையேற்படுத்தும் நோக்கத்தில் அல்ல எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

குருணாகலில் வைத்து அண்மையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெறும் எந்த அவசரமும் எனக்கில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தேன்.

குருணாகல் மாவட்டத்தில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்தில் நானே இருக்கின்றேன். இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எனக்கு கிடைக்க உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்க, கடந்த 5 ஆம் திகதி சுகவீனம் காரணமாக மரணமடைந்தார்.

இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சாந்த பண்டார தோல்வியடைந்தார்.

எனினும் விருப்பு வாக்குகளின் அடிப்படையில், சாலிந்த திஸாநாயக்கவும் அடுத்த இடத்தில் உள்ளார்.

சாலிந்த திஸாநாயக்க உயிரிழந்துள்ளதால், சாந்த பண்டார, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட உள்ளார்.