இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள ரணில் - சஜித்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் கூட்டணியான ஜனநாயக தேசிய முன்னணியை உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பில் மேற்கொள்ள வேண்டிய தித்தங்கள் சம்பந்தமாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கடந்த 7ஆம் திகதி மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து விரிவான கூட்டணியை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் ஏற்பட்டுள்ள இணக்கத்திற்கு அமைய புதிய கூட்டணியின் யாப்பில் அடுத்த சில தினங்களில் திருத்தங்கள் செய்து முடிக்கப்படும் என பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியின் யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்டதுடன் அமைச்சர் கபீர் ஹாசிமிடம் வழங்கப்பட்ட புதிய திருத்தங்கள், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.