இனப்பிரச்சினை தொடர்பில் மூச்சுக் காட்டவில்லை சஜித்!

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாச, தமிழ் மக்கள் அதிகம் வாழும் மன்னார் மாவட்டத்துக்கு நேற்று சென்றிருந்தபோதும், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலேயோ அல்லது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலேயோ வாய் திறக்கவில்லை.

மன்னார் மாவட்டத்தில் சஜித் பிரேமதாசவின் அமைச்சின் ஊடாக அமைக்கப்பட்ட வீடுகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் நேற்றுப் பங்கேற்றார்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையிலும், ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாகவும் தெரிவிக்கும் சஜித் பிரேமதாச, இந்த நிகழ்விலும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகளவு பரப்புரைகளை முன்னெடுத்தார்.

ஆனாலும், தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சினையான இனப்பிரச்சினை தொடர்பிலேயோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பிலேயோ, அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பிலேயோ மூச்சும் காட்டவில்லை.