சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை!

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கையில் மோசடியான நிறுவனம் நாடாளுமன்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச கூறியிருப்பது குறித்து தான் வருத்தப்படுவதாகவும் நாடாளுமன்றம் மோசடியானது எனக் கூறுவாராயின் அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்சவின் இந்த கருத்து சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா, சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மடிக்கணனிகள் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விஜேதாச ராஜபக்ச குற்றம் சுமத்தினாலும் அது சீன நாடாளுமன்றத்தினால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு எனவும் இதற்கு முன்னரும் பல வெளிநாடுகளிடம் இருந்து இப்படியான அன்பளிப்புகள் கிடைத்துள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அந்த மடிக்கணனியை எந்த நாடாளுமன்ற உறுப்பினராவது விரும்பவில்லை என்றால், அவர் அதனை அப்புறப்படுத்திக்கொள்ளலாம் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.