குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குற்றவாளிகளுக்கு சார்பாக செயற்படுவது கலைக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்புகு எடுக்கப்பட்டதுடன், குருணாகல் நீதவான் வழக்கை டிசம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்த அத்துரலியே ரத்ன தேரர், வழக்கின் பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்றைய வழக்கு விசாரணைகளில் கர்ப்பபை பெலோப்பியன் குழாய்களை மிக விரைவாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற வழக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அது 15 விடயங்களுடன் அறிக்கையாக வெளியிடப்பட்டது. எந்த பெண்ணுக்காவது நீண்ட காலம் பாதிப்பு ஏற்பட்டாமல் இப்படியான பரிசோதனை மேற்கொள்ள வேண்டம் என கூறப்பட்ட போதிலும் அந்த விடயங்கள் எதனையும் கவனத்தில் கொள்ளாது பெலோப்பியன் குழாய் பற்றி மட்டுமே குற்றப் புலனாய்வு திணைக்களம் கவனம் செலுத்தியது.
குற்றப் புலனாய்வு திணைக்களம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் ஷாபிக்காக ஆஜராகும் நிலைமைக்கு சென்றுள்ளது.
பாதிக்கப்பட்ட தாய்மார் தற்போது அநாதரவாக்கப்பட்டுள்ளனர். இது சம்பந்தமாக நீதிமன்றத்திடம் நியாயத்தை எதிர்பார்க்கின்றோம்.
தாய்மாரின் அனுமதியின்றி மருத்துவர் ஷாபி குருணாகல் வைத்தியசாலையில் 11 எல்.ஆர்.டி சத்திர சிகிச்சைகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது வேண்டுமென்றே செய்த பெரும் தவறு. ஒரு வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முஸ்லிம் தாய்மாருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது பிள்ளைகள் பிறந்துள்ளன.
சிங்கள தாய்மாருக்கு இரண்டாம் மற்றும் மூன்றாவது பிள்ளைகள் பிறக்கவில்லை. சிகிச்சைகளின் போது முஸ்லிம் தாய்மாருக்கு இரண்டு தையல்கள் போடப்பட்டுள்ளன.
சிங்கள தாய்மாருக்கு ஒரு தையலை போட்டு சிக்கல்களை ஏற்படும்படியாக நடந்து கொண்டுள்ளார். இவை எதுவும் இன்றைய தினம் விசாரிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன சபை ஒன்றின் மூலம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.