பொதுஜன பெரமுன தெரிவு செய்யும் வேட்பாளரை எதிர்த்தால் கூட்டணி அமைத்து பயனில்லை!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தால், அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தோம் என்பதற்காக எமது கட்சிக்கு விசேட வெற்றி எதுவும் கிடைக்காது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கவில்லை.

எதிர்க்கட்சியில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு அழைப்பு விடுக்காதது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்காது எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.