தெரிவுக்குழுவில் ஆஜராகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை நடத்தும் விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய எதிர்வரும் 20,21,22 ஆகிய திகதிகளில் வசதியான தினத்தில் சாட்சியமளிக்க வருமாறு ஜனாதிபதிக்கு தெரிவுக்குழு தெரியப்படுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலர் மட்டுமல்லாது உயர் அரச அதிகாரிகளும் இந்த தெரிவுக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளனர்.