தலைவலிக்கு தலையணையை மாற்றுவதால் பயனில்லை: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, ஐக்கியமாக இணைந்து ஒரே பயணத்தின் ஊடாக நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லும் நோக்கில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,

தற்போதைய அரசாங்கம் வெள்ளை வான் கலாசாரத்தை ஒழித்து ஜனநாயகத்தை பாதுகாத்து புதிய நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுத்தது. அதனை தொடர்ந்தும் வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதற்காக இந்த மாத இறுதிக்குள் புதிய கூட்டணி உருவாக்கப்படும்.

தலைவலிக்கு தலையணையை மாற்றுவதால் பயனில்லை. நாங்கள் புதிதாக சிந்தித்து முன்நோக்கிச் செல்ல வேண்டும். அப்படியில்லை என்றால், நாட்டின் ஜனநாயக முறைமை வீழ்ச்சியடையதலுக்கு உள்ளாகும்.

சம்பிரதாய அரசியலுக்கு அப்பால் சென்று அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து சக்திகளுடனும் கூட்டணி அமைத்து புதிய சிந்தனையுடன் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஒன்றாக, ஒற்றுமையாக நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல க் கூடிய அந்த கூட்டணியை இந்த மாத இறுதிக்குள் நாங்கள் உருவாக்குவோம் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.