ஐ.தே.க என்னை வெளியேற்றிதான் பார்க்கட்டும்! சவால் விட்ட ரஞ்சன்

Report Print Ajith Ajith in அரசியல்

பௌத்த பிக்குகள் குறித்து நான் தெரிவித்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால் நாடாளுமன்றில் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அமர்வேன் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த துறவிகள் தொடர்பில் அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐ.தே.கவினால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்றுக் குழு முன் ஆஜரான பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிட்டப்போது, ஐ.தே.க என்னை கட்சியில் இருந்து வெளியேற்றினால் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் அமர்வேன்.

இருப்பினும் வேறு கட்சியில் சேரமாட்டேன். சுசேட்சையாக போட்டியிடுவது ஒன்றும் எனக்கு சவாலான விடயமல்ல.

பௌத்த துறவிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகள் மற்றும் பல ஆவணங்களை அமைச்சர் திலக் மரபனா தலைமையிலான குழுவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் மேலும் பல முக்கிய ஆவணங்களை அடுத்த வாரம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் தெரித்தார்.