திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இந்து மக்களினதும் தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இந்து அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் மதகுருமார்கள் நல்லை ஆதீன முதல்வரின் தலைமையில் நேற்று எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இது தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்து அமைப்புக்களின் தலைவர்களுடனான சந்திப்பில் இந்து மதத்துக்கு எதிராக இடம்பெற்றவரும் அத்துமீறல்கள் தொடர்பாக அரசியல் தலைவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

வெவ்வேறு இடங்களில் நடைபெறும் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் கலந்துரையாடினார்கள். இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் ஏற்கனவே பல தடவைகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றோம்.

திருக்கேதீஸ்வர வளைவு தொடர்பாக சமூகங்களுக்கிடையிலே பிளவு ஏற்படாத வகையில் அதனை சுமூகமாகத் தீர்ப்பதற்காக சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது இன்னும் சாத்தியப்படாத நிலையில் தொடர்ந்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

இதேவேளை, இந்து மக்களினதும் தமிழரின் மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகின்றோம் என்றார்.