ரணிலும் - சஜித்தும் இணைந்தே தேர்தலை சந்திப்பார்கள்! முக்கியமான நேரத்தில் வெளியான தகவல்

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பெற செய்வதே ஒரே நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவரிடம், ரணிலுக்கும் - சஜித்துக்கும் இடையில் நடைப்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், எதிர்வரும் தேர்தலில் வெற்றிப்பெறகூடிய வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் இருவரும் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை,அமைச்சர் சஜித் பிரேமதாசவே தங்களது வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் என்று தான் கருதுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள அவரிடம், ஊடகவியாலர்கள் கேள்வி எழுப்பிய போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுவும், செயற்குழுவுமே அது குறித்து தீர்மானிக்க வேண்டும். இந்த விடயத்தில் பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கு இடமளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.