நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் திருட்டு! பொலிஸ் விசாரணை ஆரம்பம்

Report Print Aasim in அரசியல்

மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜயசேனவின் கைவளையல் திருட்டுப் போயுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டே-மாதிவெல கிராமோதய மாவத்தையில் உள்ள அவரது புதிய வீட்டில் வைத்தே இக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆறாம் திகதி நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய சுமேதா ஜயசேன தனது வீட்டின் கீழ்த்தளத்தில் உள்ள அறையின் கண்ணாடி மேசைக்குள் கைவளையலைக் கழற்றி வைத்துள்ளார்.

அதன் பின் அன்றைய தினம் மாலை அவர் நோயாளியொருவரைப் பார்த்து வர ஜயவர்த்தனபுர மருத்துவமனைக்கு சென்றிருந்த போது அவரைச் சந்திப்பதற்காக வந்திருந்த நபர் ஒருவரே சுமேதா ஜயசேனவின் மூன்று பவுண் பெறுமதியான தங்க கைவளையலைத் திருடிச் சென்றுள்ளார்.

மறுநாள் நாடாளுமன்ற அமர்வுக்குச் செல்லத் தயாராகி கைவளையலைத் தேடியபோதே அது களவு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.