இலங்கையின் முடிவுகள் தொடர்பில் பந்துல கடும் எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

பாதுகாப்பு உடன்படிக்கை மூலம் அமெரிக்காவுக்கு கொடுக்கும் அதே சலுகையை இந்தியாவும் சீனாவும் கேட்டால் என்ன செய்வது? என எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்களை சபைக்கு சமர்ப்பிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

அமெரிக்காவை எதிர்க்கும் எதிர்க்கட்சி அல்ல நாம். யுத்தத்தை நிறுத்த அமெரிக்கா எமக்கு பல உதவிகளை செய்துள்ளது. அதற்கான உடன்படிக்கைகளை செய்துள்ளோம். அதேபோல் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளையும் நாம் செய்துள்ளோம். அதில் தவறில்லை. ஆனால் இரகசியமாக செய்துகொள்ளும் உடன்படிக்கைகள் குறித்தே எமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றோம்.

வெளிப்படையாக நாம் கலந்துரையாடி இரு நாட்டுக்கும் ஏற்ற வகையில் உடன்படிக்கையை செய்துகொண்டால் அதற்கு எமது எதிர்ப்பில்லை. எந்த உடன்படிக்கை என்றாலும் அதனை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆராய்ந்து ஜனநாயக ரீதியில் செய்துகொள்ளவேண்டும் என்றே கூறுகின்றோம். மேற்குலக நாடுகளின் யுத்த பூமியாக எமது நாட்டினை மாற்றுவதென்றால் அதற்கு இடம்கொடுப்பதா என்பதே எமது கேள்வி.

பாதுகாப்பு உடன்படிக்கை மூலம் அமெரிக்காவுக்கு கொடுக்கும் அதே சலுகையை இந்தியாவும் சீனாவும் கேட்டால் என்ன செய்வது? அமெரிக்காவிற்கு இந்த சலுகை கொடுத்தால் சீனா போன்ற நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

Latest Offers