ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டியிடுகின்றேன்: முன்னாள் அமைச்சர் அறிவிப்பு

Report Print Kamel Kamel in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமும் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெற்கு ஊடகமொன்றுக்கு நேற்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியின் கீழ் தாமோ அல்லது பொருத்தமான வேறு ஒருவரோ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.

வீர துட்டுகெமுனு அமைப்பு மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகியன தமது தலைமையில் இயங்கி வருவதாகத் கூறியுள்ளார்.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள் போன்வறர்களின் ஆதரவு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவான அறிவுடைய கட்சியாக தமது கட்சி திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது இந்த முயற்சிக்கு மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும் எனவும் நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து தாம் தெளிவாக புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers