இவர்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்! பிரதமர் தொடுத்துள்ள சரமாரி கேள்விகள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு டேர்மினேட்டர் என பசில் ராஜபக்ச செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூறியுள்ளதாகவும், டேமினேட்டர் என்பவர் அனைத்தையும் அழித்து விடுவார் என்பதால், அப்படியானவர் நாட்டுக்கு அவசியமில்லை, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பவரே அவசியம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று கொழும்பு, குருணாகல், காலி மாவட்டங்களின் உள்ளூராட்சி சபையின் பிரதிநிதிகளின் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

எதிர்காலத்தை முடிவு செய்பவர் ஆட்சிக்கு வந்தால், பொருளாதாரம், அபிவிருத்தி, ஜனநாயகம், ஊடக சுதந்திரம், சுயாதீன நீதித்துறை, இலவச கல்வி, நகர முன்னேற்றம், சுகாதாரம் என அனைத்தும் முடிந்து விடும்.

இப்படியான முடிப்பவரிடமா நாட்டை கையளிக்க வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஊடகங்கள் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பெரிய ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன.

ஊடக சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டு வர போகின்றவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டுமா என நான் ஊடகங்களிடம் கேட்கின்றேன். இதனையே மக்களிடமும் கேட்கிறேன்.

ஊடகங்களில் என்னை விமர்சிப்பதை போல, முடிப்பவரை விமர்சிக்க முடியுமா? அப்படி நடந்தால், உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு என்ன ஆகும்? உங்களது வாழ்க்கையையும் நாட்டின் எதிர்காலத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமா?

முடிப்பவர் ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்காது நாட்டையும் உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு உங்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.