ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து ஒதுங்கிய காரணத்தை கூறும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி நடத்திய காரணத்தினாலேயே தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து விலகி இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது அரசாங்கத்தில் இருந்து விலகி விட்டதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் தடையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்களுடன் நேற்று கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்தவின் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

அத்துடன், முற்போக்காளர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதால், அதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.