ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு ரணிலுக்கு கட்சிக்குள் அழுத்தம்

Report Print Ajith Ajith in அரசியல்

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்காக நாடாளுமன்ற குழுவை கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரவுள்ளனர்.

இந்த தகவலை கட்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் வெளியிட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தாம் கடிதம் ஒன்றை ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்த வரையில் சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜெயசூரிய ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers