மக்களுக்கு அரசியல் கசந்துள்ளது: ரவி கருணாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த காலத்தில் இலங்கையில் இருந்த கனவான் அரசியல் தற்போது இல்லை எனவும், அனைத்து பிரச்சினைகளுக்கும் அரசியலே காரணம் எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்குள் தற்போது அரசியல் கசந்து போயுள்ளதாகவும், அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்கள் என மக்கள் நினைப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மொறட்டுவையில் அண்மையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், அந்த காலத்தில் அரசியல்வாதிகளிடம் ஒரு பிரச்சினையை எடுத்துச் சென்றால், அதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

ஆனால், தற்போது அரசியல்வாதிகளிடம் தீர்வுகளை எடுத்துச் சென்றால், அது பிரச்சினையாக மாறிவிடும்.

இது தான் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம். இதன் காரணமாகவே மக்களுக்கு அரசியல்வாதிகள் கசந்து போயுள்ளனர்.

மக்களின் அன்றாட பிரச்சினைகள் கூடுகின்றதே தவிர தீர்வுகள் வழங்கப்படுவதில்லை எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.