நிராகரிக்கப்பட்டது ஜனாதிபதியின் பரிந்துரை

Report Print Ajith Ajith in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடத்துக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயரை அரசியலமைப்பு சபை நிராகரித்துள்ளது.

இந்த பதவிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி லஷ்மி மேனகா மினு ஜெயவிக்ரமவின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயவிக்ரம, கேகாலை நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்ணான்டோவை பரிந்துரைத்திருந்தார்.

சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிரேஸ்ட பிரதி மன்றாடியார் நாயகம் சோபிதா ராஜகருணவின் பெயரை பரிந்துரைத்திருந்தார்.

எனினும் அரசியலமைப்பு சபை ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.