நாட்டில் உள்ள அனைவரும் பொறுமையின்றி காத்திருக்கின்றனர்: விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டில் உள்ள அனைவரும் நாளைய தினத்திற்காக பொறுமையின்றி காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

நாளைய தினம் பிற்பகல் 3 மணிக்கு பின்னர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமையை ஏற்றதும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார்.

அப்போது அவர் “கோ” எனக் கூறும் போது, பட்டாசு கொளுத்தி கொண்டாட மக்கள் தயாராக இருக்கின்றனர்.

கொழும்பு குப்பை தொடர்பான பிரச்சினையை தீர்த்தன் மூலம் கோத்தபாய ராஜபக்ச எப்படியான சுவிஷேமான தலைவர் என்பது புரிந்து விடும்.

அவர் குப்பையை பயன்படுத்தி அரசியல் செய்யவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.