விடுதலைப் புலிகளின் தலைவர் ஓர் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு போரிட்டார்! மஹிந்த புகழாரம்

Report Print Rakesh in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஓர் இலட்சியத்தை அடிப்படையாக கொண்டு போரிட்டார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

அத்துடன், அவரிடம் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருந்தது. அடிக்க வேண்டும் என்றால் அடிப்பார் இல்லையென்றால் அடிக்காமல் விடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஆளும் தரப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவர் வேட்பாளர் பட்டியலில் பிரதானமாக உள்ளனர்.

ஆனால், அவர்களில் யார் வந்தாலும் எங்களுக்கு சவால் இல்லை. நாம் தான் வெற்றிபெறுவோம். தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்று வரும் போது அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாணலாம்.

குறிப்பாக இந்தியாவின் காஷ்மீரில் நடந்த நிலைமையை கருத்தில் கொண்டே நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவற்றைப் புரிந்து கொண்டே அரசியல் தீர்வு திட்டத்தை தேட வேண்டும். ஆனால் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு வருடங்களில் அரசியல் தீர்வைக் காண்பேன்.

மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளக் கூடிய, மக்களையும் நாட்டையும் நேசிக்கின்ற பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய அனைத்து இன மக்களுக்கும் ஒரே முறையில் சேவையாற்றுகின்ற அனைத்து மத மக்களையும் மதிக்கின்ற ஒரு தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக நான் பெயரிடுவேன் என தெரிவித்துள்ளார்.