மைத்திரி - மகிந்த சந்திப்பில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மூன்றாவது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்கவும், கட்சியின் ஆதரவை பொதுஜன பெரமுனவுக்கு வழங்குவது தொடர்பாகவும், மகிந்த ராஜபக்சவுடன் இணக்கத்திற்கு வருவது சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடந்த முதல் சந்திப்பில் இந்த விடயம் தொடர்பாக அடிப்படை இணக்கம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவில் இணைந்த பின், அவர்களின் மாவட்ட பிரதிநிதித்துவத்தை பாதுகாத்து தருமாறு ஜனாதிபதி இந்த சந்திப்பில் மகிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவும் பொதுஜன பெரமுன தலைமையிலான மகிந்தவின் அரசாங்கத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் இடம் தொடர்பாகவும் இந்த பேச்சுவார்தையில் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது எனவும் இருத்தரப்பினரும் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதி தனது கம்போடியா விஜயத்தை முடித்து நாடு திரும்பியதும் கோத்தபாய ராஜபக்சவை தனியாக சந்தித்து பேசவுள்ளார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த சமரசிங்க, மொஹான் லால் கிரேரு, லசந்த அழகியவண்ண, துமிந்த திஸாநாயக்க உ்ளளிட்டோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.