சுதந்திரக் கட்சியின் உதவியின்றி அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது: துமிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியுடன் மட்டுமே நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இது பொருந்தும். எந்த கட்சி என்பதை விட தேசிய கொள்கையை முன்வைக்கும் சரியான வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதற்கான தீர்மானத்தையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்கும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers