நாட்டில் மருந்து பொருட்களுக்கு பற்றாக் குறையா? அமைச்சர் ராஜித

Report Print Ajith Ajith in அரசியல்

நாடு முழுவதும் மருத்துவ பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்ட கருத்தை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மறுத்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அத்துடன் சுகாதார மருந்து வழங்கள் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலும் கராப்பிட்டி, இரத்தினபுரி, பதுளை ஆகிய மருத்துவமனை இயக்குனர்களும் இந்த தகவலை மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவமனையில் மருந்து பொருட்கள் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறி பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.