சஜித் பிரேமதாசவினால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி! நவீன் கடும் சீற்றம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் அறிவிக்கும் முன்னரே அமைச்சர் சஜித் பிரேமதாச மேற்கொள்ளும் பிரச்சாரங்களினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தாமே என சஜித் பிரச்சாரம் செய்து வருவதனால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதாகவும் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை அறிவித்த பின்னரே பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்ற போதிலும் இங்கு வித்தியாசமான வகையில் அமைச்சர் சஜித் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான பிரச்சாரங்களினால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படக்கூடிய சாத்தியமும் உண்டு என அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.