அமெரிக்காவில் ஒளிந்திருந்த சிலர் அமெரிக்காவையே விமர்சிக்கிறார்கள் !

Report Print Ajith Ajith in அரசியல்

சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறாமல் அரசாங்கம் எந்த நாட்டுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடாது என அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

சோபா ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை அரசாங்கம் ஏற்கனவே கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சூழலில் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றது. இருப்பினும், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு மோசமாக பாதிப்பை ஏற்படுத்தினால் எந்த நேரத்திலும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய சட்டமா அதிபருக்கு அதிகாரம் உள்ளது.

நாட்டில் சிலர் அமெரிக்காவை விமர்சிக்கிறார்கள், ஆனால் அவர்களும் அவர்களது குழந்தைகளும் அந்த நாட்டில் படித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அங்கு செல்கிறார்கள்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக மாற விரும்பும் ஒருவர் போரின் போது அமெரிக்காவில் ஒளிந்து கொண்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போரில் வெற்றிபெற அமெரிக்கா உதவியதையும் நினைவில் கொள்ள வேண்டும் . இத்துடன் ஆண்டுதோறும் இலங்கையிலிருந்து ரூ .11 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்கா கொள்வனவு செய்வதாக வாங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.