ஐ.நா பிரதிநிதிகளை சந்தித்த வட மாகாண ஆளுநர்

Report Print Ajith Ajith in அரசியல்

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் Dr. சுரேன் ராகவன் ஆகியோர் நேற்று இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, போரினால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வட மாகாணத்தின் பாதுகாப்பை ஸ்தீரனப்படுத்தல் ஆகியன குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐ.நா.வின் ஒத்துழைப்பையும் ஆளுநர் கோரியுள்ளார்.