உறுதியானது மஹிந்தவின் பதவி! நாளை பிரம்மாண்ட அறிவிப்பு

Report Print Aasim in அரசியல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய சம்மேளனத்தின்போது அதன் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய சம்மேளன நிகழ்வுகள் நாளை மாலை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

அது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது.

தேசிய சம்மேளன நிகழ்வுகளின் இடையில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை, மஹிந்த ராஜபக்ஷ நாளை பெயரிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வேட்பாளரைத் தெரிவு செய்வது சிரமமாக இருந்தால், சிறிகொத்த முன்பாக சங்கீதக் கதிரைப் போட்டியொன்றை நடத்துமாறும் ரோஹித அபேகுணவர்தன கிண்டல் செய்துள்ளார்.