கம்போடியாவில் இலங்கைத் தூதரகம் அமைக்கப்படும் - ஜனாதிபதி

Report Print Kamel Kamel in அரசியல்

கம்போடியாவில் இலங்கைத் தூதரகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, அங்கு தூதரகம் ஒன்று நிறுவப்படும் என உறுதியளித்துள்ளார்.

தலைநகர் நொம்பொங்கில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வுகளின் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தூதரகம் நிறுவப்படும் வரையில் ராஜதந்திர பணிகளை மேற்கொள்வதற்கு கொன்சோல் ஜெனரல்கள் நியமிக்கப்படுவர் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

தேரவாத பௌத்த மத நாடான கம்போடியா, இலங்கையுடன் இணைந்து உலகம் முழுவதிலும் தர்மத்தை பிரச்சாரம் செய்ய வேண்டுமெனவும் அதற்கான திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி ஜனாதிபதி கம்போடிய விஜயத்தை ஆரம்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.