ஜனாதிபதியின் பரிந்துரை நிராகரிப்பு! பிரதம நீதியரசர் வெளிப்படுத்தும் தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்தவர், தகுதி குறைந்தவர் என பிரதம நீதியரசர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து மற்றும் ஒருவரை பரிந்துரைக்குமாறு அரசியலமைப்புசபை ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான வெற்றிடத்துக்காக லக்ஷ்மி மேனகா ஜெயவிக்ரம என்பவரை ஜனாதிபதி பரிந்துரை செய்திருந்தார்.

எனினும் அவர் குறித்த பதவிக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என கூறி சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய அரசியலமைப்புசபை ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்தது.

இதன்போது ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டவர் நீதித்துறையில் போதிய அனுபவத்தை கொண்டிருக்காதவர் என பிரதம நீதியரசரும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து புதிய ஓருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதியிடம் அரசியலமைப்பு சபை கோரியுள்ளது.

Latest Offers