யோசனைக்கு அங்கீகாரம் வழங்க கோரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பான யோசனைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இதன்படி 4.4 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலுத்த நேரிடும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.

2 பில்லியன் ரூபாவிற்கு ஜனாதிபதி செயலகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸூக்கு செலுத்த வேண்டிய 113 மில்லியன் ரூபா, கால்டன் இல்லத்துக்கான 10 மில்லியன் உணவு பொருட்கள் போன்ற செலவுகள் இதில் அடங்கியுள்ளன.

அமைச்சரவையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த கோரிக்கையை அமைச்சரவை திறைசேரிக்கு பாரப்படுத்தியுள்ளது.

மஹிந்தவுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்திய பின்னரே இந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.

எனினும் இந்த செலவுகள் தொடர்பில் ஏற்கனவே 2016இல் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் இன்று வரை முடிவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers