பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பிக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடந்தும் கட்சியின் முதலாவது மாநாட்டில், கட்சி என்ற ரீதியில் கலந்து கொள்வதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.

எனினும் தான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், கட்சியின் தீர்மானம் எதுவாக இருந்தாலும் தான் உட்பட 15 பேர் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் கலந்து கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Latest Offers