கோத்தபாயவுக்கு மகிந்த வழங்கிய நற்சான்றிதழ்

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாய ராஜபக்ச அமைதியான செயற்பாட்டு ரீதியான நபர் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமாக எதிரணியினர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தாலும் அவர் அப்படியான கெட்ட நபர் அல்ல எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவா என இந்திய ஊடகத்தின் செய்தியாளர் மகிந்தவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள அவர், நான் நினைப்பது போல் அதனை மக்கள் தீர்மானிததள்ளனர் என கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பரப்படும் கருத்துக்கள் எதிரணியினரால் மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரம். இதனை தற்போது முஸ்லிம் மக்கள் புரிந்துக்கொண்டுள்ளனர்.

மேலும் சிறுபான்மை மக்கள் மத்தியில் கோத்தபாய ராஜபக்ச சம்பந்தமாக ஆதரவு இருக்கின்றது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்விக்கு இந்தியாவின் ரோ அமைப்பை காரணமாக கூறியிருந்தமை தொடர்பாகவும் இந்திய ஊடகத்தின் செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மகிந்த, அது கடந்த காலம் என்பதால், தற்போது அதனை மறந்து, எப்போதும் இல்லாத வகையில், இரண்டு தரப்பு பரிந்துக்கொண்டு செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் தாக்குதலுடன் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியை, தான் உட்பட தமது தரப்பினால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என இந்திய பிரதமர் உட்பட இந்திய அரசாங்கம் புரிந்துக்கொண்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers