அரசாங்கம் சர்வாதிகார அடையாளங்களை காட்டுகிறது: ஷெயான் சேமசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

தேர்தல்களை ஒத்திவைத்து தற்போதைய அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியின் அடையாளங்களை காட்டியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினாலும் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்த வேண்டிய தேர்தல்களை நடத்தாதன் மூலம் சர்வாதிகாரத்தின் அடையாளங்களை அரசாங்கம் காட்டியது.

இளம் தலைமுறையினருக்கு குரல் கொடுக்கும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பமுவதா காண தற்போதைய அரசாங்கம் விரும்பவில்லை எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers